சடுதியாக உயர்ந்தது கொரோனா! தேசிய முடக்கத்துக்குத் தயாராகும் பிரான்ஸ்!! 32 பேர் உயிரிழப்பு!!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று, ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாக பிரதமர் jean castex தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேலும் 21 பகுதிகள் இப்போது சிவப்பு மண்டலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அது முன்னதாக இரண்டாக இருந்தது.

இது தொடர்பில் அவர் அவர் மேலும் கூறுகையில், 

‘தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இப்போது நாம் தலையிட வேண்டிய நேரம் இது. பிரான்ஸ் வேகமாக செயற்படவில்லை என்றால் பரவல் அதிவேகமாக மாறக்கூடும்.

இந்த பரவல் முதன்மையாக இளைஞர்களிடையே இருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கை படிப்படியாக வாரத்திற்கு 800ஆக உயர்கிறது. பரிமாற்ற வீதம் இப்போது 1.4 ஆக உள்ளது மற்றும் வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது’ என கூறினார்.

மேலும், சுகாதார அமைச்சகம் உள்ளூர் அல்லது தேசிய முடக்க நிலைக்கான திட்டங்களை வகுத்து வருவதாகக் தெரிவித்தார்.

இதேவேளை  பிரான்சில் COVID -19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொது சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,

கடந்த 48 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 32 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

ஆகஸ்ட் 27, 2020 வியாழக்கிழமையுடன் மொத்தமாக 30,576 பேர் இறந்துள்ளனர்,

மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 259,698

கடந்த 24 மணிநேரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் 6,111, (ஆகஸ்ட் 27, 2020)

பிரான்ஸ் பொது சுகாதார பணிமனையின் கணனி கோளாறினைத் தொடர்ந்து, இறப்பு தரவு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நேற்றுடன் சேர்த்து (27/08/2020) ஒட்டுமொத்தமாக உள்ளன.

பிரான்ஸ் பொது சுகாதார பணிமனையின் கணினி செயலிழந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26 அன்று இறப்பு தரவு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கிடைக்கவில்லை. 

ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை வெளிவந்த தகவலின்படி 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் 32 பேர் இறந்தனர். EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 10,506 இறப்புகளைப் பதிவுசெய்கிறது,

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 20,070 (48 மணி நேரத்தில் +32) ஆகும்.

பிரான்சில் தற்போது மொத்தம் 4,535 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 381 பேர் உள்ளனர்.
Previous Post Next Post