முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய விக்னேஸ்வரன்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி வி விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற பயணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் சத்தியபிரமாணத்துடன் ஆரம்பித்துள்ளார்.

முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு இன்று காலை சென்ற விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தனது சத்திய பிரமாணம் உரையை நிகழ்த்தினார்.


வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரன் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் செல்லவுள்ள நிலையிலையே முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதே வேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் சின்கிகிழமை முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post