யாழில் நண்பர்கள் கேலி செய்ததால் தூக்கில் தொங்கி உயிரிழந்த மாணவன்!

வடமராட்சி, நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி வீதியைச் சேர்ந்த அருளானந்தம் ஆர்த்தியன் (வயது-17) என்ற மாணவனே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ தினம் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குறித்த மாணவன் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் அவரது நண்பர்கள் கேலி செய்ததாலேயே குறித்த மாணவர் இம் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post