20வது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது முக்கிய அதிகாரங்கள்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று காலை 20ஆம் திருத்தச் சட்டமூல வரைபானது அரச அச்சக திணைக்களத்திற்கு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் திருத்தத்திற்கு உள்ளான முக்கிய விடயங்கள்...

19வது திருத்தத்தில் அதிகபட்சமாக 30 கபினற் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே இருக்க முடியும் என்ற சரத்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 20வது திருத்தத்தில் இருந்து நீக்கப்பட்டு எத்தனை அமைச்சர்களையும் நியமிப்பதற்கு அமைச்சரவைத் தலைவரிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக இருப்பவர் எந்த அமைச்சையும் தன் வசம் கொண்டிருக்க முடியாது எனும் 19வதுதிருத்த சரத்தும் நீக்கப்பட்டு ஜனாதிபதி எத்தனை அமைச்சுக்களையும் நிறுவனங்களையும் தமக்கு கீழ் கொண்டிருக்கலாம் என்ற முக்கிய சரத்து 20வது திருத்தத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அவற்றுடன் 20வது திருத்தத்தில் சுயாதீன குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை நேரடியாக நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நடைமுறைப்பாராளுமன்றம் அதன் அவதானிப்புக்களை மாத்திரமே அனுப்பிவைக்கமுடியும் .

சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கும் ஆட்களை நியமிப்பதற்கான அதிகாரமும் 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post