கியூடெக் கரித்தாஸின் இளையோர் அமைப்பினால் சாட்டிக் கடற்கரையில் சிரமதானம்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் இளையோர் அமைப்பினால் வேலணை, சாட்டி சுற்றுலாக் கடற்கரை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கியூடெக் கரித்தாஸ் சமாதான நல்லிணக்க செயற்திட்டத்தில் இளையோருக்கான கருத்தமர்வும் அண்மையில் வேலணை சாட்டிமாதா  கோவில் வளாகத்தில் இயக்குனர் அருட்பணி ச.இயூஜின் பிரான்சிஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய இயக்குனர்  “இன்றைய இளையோர் இன்றைய பொறுப்பு ஏற்கும் முன்மாதிரிகளாக மாறவேண்டும். அதற்கான செயற்பாடுகளே குழுக் கலந்துரையாடல்களாக, ஒன்றுகூடல்களாக, சிரமதானப் பணிகளாக கடற்கரை சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தல்களாக சமூக மட்டத்திலும் செயற்படுத்தி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயல்களே சிறந்த அடையாளமாகும்.

இளையோரின் பொறுப்பேற்கும் நற்பணிகள் தன் நிலையிலும், சமூகமட்டத்திலும் மனப்பாங்கு மாற்றத்தினை வெளிப்படுத்துவதில் முன்மாதிரிகளே இன்றைய காலத்தின் தேவை ஆகும்.

யாழ் மாவட்ட கியூடெக் கரித்தாஸ் இளையோர் கழக உறுப்பினர்கள் காரைநகர், பலாலி, நாவாந்துறை, புதிய சோனகத்தெரு, சோனகத்தெரு, நயினாதீவு, மணியந்தோட்டம், சாட்டி, அல்லைப்பிட்டி போன்ற கிராமங்களில் இருந்து 65 இளையோர்கள் ஒன்றுகூடி எதிர்கால திட்டமிடலுடன் யாழ் மாவட்ட கியூடெக் கரித்தாஸ் இளையோர் நிர்வாக அமைப்பு புதுப்பிக்கப்பட்டது.

சிறப்புரையாற்றிய அருட்பணி எமில் போல் அடிகளார் “இன்று எமது இளையோர் தலைமைத்துவம் பொறுப்புள்ளவையாக செயற்படும் அர்ப்பணிப்புகள் தூரநோக்குடன் உங்கள் பகுதிகளில் ஒவ்வொரு சிறுசெயல்களும் மக்களின் மனமாற்றத்தின் செயல்களாக மாற்றம் பெறும”; என்றார்.

வளவாளராக திரு.யோ.யஸ்ரின் , திரு.யோசப்பாலா, திரு.ச.பாஸ்கரன் ஆகியோரின் வழிகாட்டலுடன் இளையோர் மனப்பதிவுகளாக கடற்கரையில் சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தலில் இளையோர் பங்கேற்புக்கள் ஆர்வமூட்டியதுடன் பொறுப்புடன் சமூகப்பணிகளில் ஈடுபட வைத்து எமது இளையோரின் மனங்களை வென்ற இவ் ஒன்றுகூடல் எமது கிராம முன்னேற்றங்களிலும் செயல்பட தூண்டியது. இதனை வழிகாட்டிய கியூடெக் கரித்தாஸ் இயக்குனர், பணியாளர்களின் அர்ப்பணிப்புக்கள் பாராட்டத்தக்கது.


Previous Post Next Post