வாளால் இளைஞனை வெட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை! யாழில் அதிகாலை சம்பவம்!! (படங்கள்)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இளைஞனை வாளால் வெட்டி விட்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாதோரால் கொள்ளையிடபபட்டுள்ளது. 

இச் சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றுள்ளது.

கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் (வயது -43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொள்ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு வாளாள் வெட்டிவிட்டு அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.Previous Post Next Post