யாழில் நடந்த சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி! (படங்கள்)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கியூடெக் கரித்தாஸ் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டுக்கான சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி கொழும்புத்துறை மாதர் சங்க முன்றலில் கியூடெக் கரித்தாஸ் இயக்குநர் அருட்பணி. இயூஜின் பிரான்சிஸ் அடிகள் தலைமையில் கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.

யாழில் பல இடங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள், இக் கண்காட்சியைப் பார்வையிட்டதுடன், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் வாங்கிச் சென்றுள்ளனர். 

கொழும்புத்துறை ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பித்து ஊக்கப்படுத்திய யாழ். பிரதேச செயலர் சுதர்சன் தமது உரையில், மக்களின் சுய முயற்சிகளை இனங்கண்டு முயற்சியால் முன்னேற முடியுமெனும் வெளிப்பாட்டை ஆர்வமுடன் வெளிப்படுத்தத்தூண்டிய கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டத்தக்கது. 

இதில் இணைந்த முயற்சியாளர்களுக்கு தொடர்ந்தும் சந்தைப்படுத்தக்கூடிய பொது விற்பனை நிலையம் அமைப்பதில் நாமும் ஊக்கப்படுத்தி நிலையான வாழ்வாதரத்தை வலுப்படுத்த ஆவன செய்வோம். எமது மக்களிடமுள்ள ஆற்றல்திறன் முயற்சிகள் ஒருங்கிணைங்த சமூக மேம்பாட்டை ஏற்படுத்துவதோடு எங்கள் வழங்களை பயன்படுத்துவதில் முன்நிற்கும் முயற்சியாளர்களை பாராட்டுகின்றோம் என்றார்.

இயக்குநர் அருட்பணி. இயூஜின் பிரான்சிஸ் தலைமை உரையில், கணகாட்சியும் விற்பனையும் வெறும் பொருட்களோடு மட்டுமல்லாது மனித உறவை வலுப்படுத்துவதிலும் மதங்கள் ஒன்றுபட்டு அன்புப் பகிர்வுடன் நட்புறவை வளர்ப்பதிலும் புதிய எண்ணக்கருக்களாக உருவாகும் மனநிலை மாற்றமும் ஏற்பட வைத்தது. என்ன வளம் இல்லை எம்நாட்டிற்கென்ற மன உணர்வை தூண்டவும் வழிசமைத்தது. இதனை மேம்படுத்த குழுக்கள் எல்லோரும் அரச அரசசார்பற்ற ஊடகத் துறையினரின் பங்களிப்புமே இக்கண்காட்சியின் வெற்றியாகும் என்றார்.

முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் வல்வை அனந்தராஜா அவர்கள் குறிப்பிடுகையில், எமது வாழ்வாதாரத்தின் அடித்தளமாக இருக்கும் உள்ளுர் உற்பத்திகளை பெருக்குவதன் மூலம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் சுய முயற்சியால் முன்னேறும் வழிகாட்டலையும் பெறுகிறார்கள். இவை வாராந்த தொடர் சந்தையாக மாறும் போது அந்நிய மோகம் மறைந்து சுய பொருளாதாரத்தை வலுவாக்குவதில் மக்கள் பங்காளர்களாக பொறுப்புடன் முன்னேறுவார்கள் என்றார். 

இலங்கை வானொலி யாழ் சேவை இணைப்பாளர் மு. இரவீந்திரன் உரையாற்றுகையில், சுய பொருளாதாரம் மேம்பட ஒருங்கிணைந்து கிராமத்தின் சுய முயற்சியை வெளிக்கொணரும் முயற்சியில் எமது மக்களின் வழங்கள் இனங்காணப்பட்டு வாழ்வாதாரத்துடன் இணைக்கின்ற கியூடெக் கரித்தாஸின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதே.

இவற்;றுடன் எமது மக்களின் போசாக்கும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இதில் கால்நடை வளர்ப்பும் ஊக்குவிக்கப்பட வேண்டும். பெட்டிப்பால் மாக்களுக்குள் மூழ்கியிருப்போர் மனமாற்றம் பெற்று எம் மண்ணின் பசும்பால் உற்பத்தியும் ஆடு, மாடு வளர்ப்பிலும் கூடிய கவனம் செலுத்துவது எமது சுய தேவைகளை போசாக்குடன் பூர்த்திசெய்யக் கூடியதாய் அமையும்.
வாழ்வாதார உதவிகள் நன்கு பயிற்றப்பட்டு வழங்கப்படாத பட்சத்தில் வாழ்வாதார உதவிகள் பயனற்றதாகிவிடும். 

சுய முயற்சிகள் அதன் பயன்கள் எமது மக்களின் முறையான வாழ்வாதாரத்தைப் பெறுவதுடன் போசாக்கான உணவுப் பழக்கங்களை எமது மக்கள் அனுபவிக்க முடியும். இதன் முதற்படியான இக் கண்காட்சி சிறப்பான திட்டமிடலுடன் மக்கள் மனதைத் தூண்டியமை பாராட்டத்தக்கது என்றார்.Previous Post Next Post