யாழ்.-ஊர்காவற்றுறை பிரதான வீதியில் சற்றுமுன் விபத்து! ஒருவர் படுகாயம்!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம்-ஊர்காவற்றுறை பிரதான வீதியில் சற்;றுமுன் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வேலணைப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பட்டா ரக வாகனம் அல்லைப்பிட்டி மூன்று முடி அம்மன் ஆலயத்துக்கு அண்மையில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகில் நின்ற மின் கம்பத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் சாரதிக்கு அருகில் அமர்ந்திருந்தவரே படுகாயமடைந்தவர் ஆவார்.Previous Post Next Post