நாட்டில் 20ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழப்பு!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட் -19 நோய்த் தொற்றால் 20ஆவது நபரும் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இன்று (ஒக்.31) சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12இல் வசிக்கும் அந்தப் பெண் நீரிழிவு நோய் காரணமாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 10 ஆயிரத்து 424 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 282 பேர் சுகமடைந்துள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post