வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட மூவருக்கு கோரோனா!


வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மூவரது மாதிரிகளும் மீண்டும் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனையை செய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தகவலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

பதுளை உள்ளிட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் அறிவுறுத்தலில் வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட 25 ஊழியர்களது மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அவர்களில் மூவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அந்த மூவருக்கும் மீளவும் பிசிஆர் பரிசோதனை சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்படவுள்ளது.
Previous Post Next Post