இலங்கையில் பதிவான மற்றுமொரு கொரோனா மரணம்! 23 வயது இளைஞர் பலி!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கொழும்பு 15 சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்று ஏற்பட்டமை காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 400 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,492 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post