யாழில் பயங்கரம்! நடு வீதியில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மீசாலையில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவா் உயிரிழந்தார்.

யாழ். தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தில் 47 வயதான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். 

மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்துக்கு பின்பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வீதியால் சென்று கொண்டிருந்தபோது அவரைப் பின்தொடர்ந்தவா்கள் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

நெஞ்சிலும் கையிலும் கடுமையான கத்திக் குத்துக் காயங்களுடன் உயிருக்குப் போரடிய குடும்பஸ்தர் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வைத்தியசாலையில் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் உறுதி செய்தன.

இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை. இது குறித்த விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post