கனடாவில் கடைகளுக்குள் புகுந்து ஆயுத முனையில் கொள்ளை! ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கைது!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ரொரண்டோவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து தமிழ் இளைஞர்கள் நேற்று முன்தினம் 15-ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கைது செய்யப்பட்டவா்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவா்கள் செய்த குற்றங்களையும் ரொரண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

லக்ஷ்மன் பத்மராஜா, ராகுலன் குமராசலம், லபீஷன் கலைவாணன், மதுசன் துரைராஜசிங்கம், ஷெரன் விக்னேஸ்வரன் ஆகிய தமிழ் இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவ்வாண்டு ஜனவரி 6 முதல் ஒக்டோபர் 19 வரை கிங்ஸ்டன் சாலை மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் நடந்த மூன்று சிறு கொள்ளைகளுடன் இவா்கள் தொடர்புபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மூன்று சில்லறை கடைகளுக்குள் நுழைந்து முகத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் திருடப்பட்ட வாகனம் ஒன்றில் கொள்ளையர்கள் தப்பியோடியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்த புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் புலனாய்வாளர்கள், ரொரண்டோ போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவு பொலிஸார் உதவியுடன் ஐந்து சந்தேக நபர்களும் கடந்த இரு நாட்களுக்கு முன் டிசம்பர் 15-ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இவா்களில் ரொரண்டோவைச் சேர்ந்த 25 வயதான லக்ஷ்மன் பத்மராஜா என்பவர் மீது, தாக்குதல் ஆயுதத்துடன் கொள்ளையில் ஈடுபட்டமை, பலவந்தமாக ஆட்களை பிணையக் கைதியாக்கியமை, கொள்ளை நோக்கத்துடன் உரு மறைப்புச் செய்தமை, அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் ரொரண்டோவைச் சேர்ந்த 24 வயதான ராகுலன் குமராசலம் என்பவர் மீது, தாக்குதல் ஆயுதத்துடன் கொள்ளையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன், ரொரண்டோவைச் சேர்ந்த 21 வயதான லபீஷன் கலைவனன் என்பவர் மீது, தாக்குதல் ஆயுதத்துடன் கொள்ளையில் ஈடுபட்டமை, பலவந்தமாக ஆட்களை பிணையக் கைதிகளாக்கி கொள்ளையிட்டமை, உருமறைப்புச் செய்து கொள்ளையிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

விட்பியைச் சேர்ந்த 21 வயதான மதுசன் துரைராஜசிங்கம் என்பவர் மீது, தாக்குதல் ஆயுதத்துடன் கொள்ளையில் ஈடுபட்டமை, பலவந்தமாக ஆட்களை பணயக் கைதிகளாக்கியமை, உருமறைப்புச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன். ரொரண்டோவைச் சோ்ந்த 21 வயதான ஷெரன் விக்னேஸ்வரன் மீது தாக்குதல் ஆயுதத்துடன் கொள்ளையிட்டமை, ஆட்களை பணயக் கைதிகளாக்கியமை, உருமறைப்புச் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர்கள் ஐவரும் கைதான டிசம்பர் 15-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post