யாழில் விபத்து! வீதியில் மயங்கிக் கிடந்த முதியவருக்கு உதவி செய்யாத மக்கள்!! பரிதாபமாகப் பறிபோனது உயிர்!!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
துவிச்சகர வண்டியில் பயணித்த முதியவர், வாகனம் ஒன்று மோதித் தள்ளிவிட்டு தப்பித்த நிலையில் நீண்ட நேரம் வீதியில் சுயநினைவற்றுக் கிடந்து உயிரிழந்துள்ளார்.

இந்தப் பரிதாபச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவற்குழியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

நாவற்குழி, 300 வீட்டுத்தோட்டத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான அந்தோனி சகாயதாஸ் (வயது -64) என்பவரே உயிரிழந்தார்.

முதியவர் மீன் வியாபாரி. அவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் பாசையூருக்கு மீன்கொள்வனவு செய்ய சென்றுள்ளார்.

நாவற்குழி பாலத்தில் பின்னால் சென்ற வாகனம் அவரை மோதியுள்ளது. ஒரு மணித்தியாலமாக எவரும் உதவி செய்யாத நிலையில் அவர் வீதியில் இருந்துள்ளார்.

காலை 6.15 மணியளவில் வீதியால் சென்றவர் விபத்தானவரின் அலைபேசியை எடுத்து அவரின் மகனுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மகன் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் கூறப்பட்டது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

இதேவேளை, கரவெட்டியில் இருந்து அச்செழு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவர் மகேந்திர வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்தவாரம் சேர்க்கப்பட்டார்.

அவர் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கரவட்டியைச் சேர்ந்த இரண்டு வயது பிள்ளையின் தந்தையான தர்மலிங்கம் விசாகன் (வயது- 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவரது மோட்டார் சைக்கிளிலில் பின்னிருக்கையில் இருந்து பயடணித்தவர் தெய்வாதீனமாகத் தப்பித்தார்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
Previous Post Next Post