பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அனைத்துக் குடும்பங்களுக்கும் கடன் உதவி!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் அவர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய சலுகை வட்டி விகிதத்தில் கடன் உதவியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்தக் கடன் திட்டம் 03 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு அல்லது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உழைப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

மாத சம்பளம் அல்லது வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கு முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும். மாத சம்பளம் அல்லது வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், கடன் தொகை 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்தக் கடனை இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கி ஆகிய வழங்குகின்றன.

நிதி உதவி பெற விரும்பும் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களின் சான்றளிக்கப்பட்ட சம்பளப் பட்டியலை வேலை செய்யும் இடத்திற்கு அருகிலுள்ள அரச வங்கியில் சமர்ப்பிக்கும் போது, அந்த வங்கிக் கிளை ஊழியர்களின் கணக்கில் உடனடியாக அந்தக் கடன் தொகையை வரவு வைக்கும்.

கடனை 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாத வட்டி 0.625 சதவீதம். கடன் தொகை 2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

அரசு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு கடன் வழங்குவது ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கியில் உள்ளது.

முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள், பாடசாலை வான்கள், பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் தங்கள் வங்கிக் கணக்கு பராமரிக்கப்படும் அரச வங்கியில் தங்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த வகையைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்கள் நாள் சம்பளத்துக்கு வேலை செய்வர்களாயின் அரச வங்கிகளில் கணக்கு உள்ளவர்கள் தங்கள் வங்கியின் அறிவுறுத்தலுக்கு அமைய நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்- என்றுள்ளது.
Previous Post Next Post