பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கு கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானவேல் மக்ரோனுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (டிச-17) வியாழன் கிடைத்துள்ள அவரது பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்துவரும் ஒரு வாரத்திற்கு அவரது அரசுமுறை நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய கோவிட் நடைமுறைகளுக்கு அமைவாக ஏழு நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்திக் கொண்டுள்ள போதிலும் அங்கிருந்தவாறே தனது நாளாந்த கடமைகளை மக்ரோன் ஆற்றுவர் எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post