அரபு நாடாக மாறியது யாழ்ப்பாணம்! ஆதரவளித்தது முன்னணி!! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் சடலங்களை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முஸ்லிம் மக்களினால் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் முஸ்லிம் மக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் முஸ்லிம் மக்கள் அரபு மொழிகளால் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இச் செயற்பாடு இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றது.

இலங்கையில் சிங்களமும், தமிழுமே அரச கரும மொழி. இதில் சர்வதேச மொழியான ஆங்கிலம் மூன்றாவதாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணத்தில் பிற நாட்டு மொழியான அரபு மொழி எழுதப்பட்ட பதாதைகளுடன் முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளமை இன, மொழிப் பற்று இல்லாது போனதை எடுத்துக் காட்டியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கே.சுகாஸ், யாழ்ப்பாணம் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், அரசியல் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post