யாழில் கொரோனாத் தொற்று! தற்போதைய நிலவரம் தொடர்பில் யாழ்.அரச அதிபர் விளக்கம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் – 19 நோய்த் தொற்று நிலமைகளையடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 400 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 818 பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

அத்துடன், கோவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்ட 88 பேர், சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இன்று சுன்னாகம் பொதுச் சந்தை வியாபாரிகள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று டிசெம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை மாலை சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் மேலும் தெரிவித்ததாவது;

ஒக்டோபர் 4ஆம் திகதிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நிலமைகளைக் கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

அதனடிப்படையில் இன்று மாலை நிலவரப்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 400 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 818 பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 300 குடும்பங்களும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 215 குடும்பங்களும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 181 குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய பிரிவுகளிலும் குறிப்பிட்டளவு குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் இன்று மாலை வரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 93 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் முழுமையாகச் சுகமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் பெறுமதியான உணவுப்பொருள் பொதி இரண்டு கட்டங்களாகப் பிரித்து வழங்கப்படும்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருபவர்களில் அலுவலகப் பணி தவிர்ந்த அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள். இறுதிச் சடங்குகளில் 25 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் – என்றார்.
Previous Post Next Post