யாழில் விபத்து! விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் உயிரிழப்பு!!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் யாழ்ப்பாணம், அரியாலை பார்வதி வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய மயூரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த மயூரன் தப்பிக்க முயன்று பாய்ந்ததாகவும் வீதியில் அவர் வீழ்ந்தபோது அருகே வந்த வாகனம் அவர் மீது மோதியதாலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரியவருகிறது.

இதேவேளை மயூரனின் சகோதரனும் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post