சிறிதரன் எம்.பியின் மகன் மீது வீடு புகுந்து தாக்குதல்! நடந்தது என்ன? (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வீட்டுக்குள் புகுந்த சிலர், அவரது மகன் மீது தாக்குதல் நடத்தியதுடன், மோட்டார் சைக்கிளையும் அடித்துச் சேதப்படுத்தி விட்;டு தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த விடயம் குழு மோதல் எனவும், அரசியல் தொடர்புடைய தாக்குதல் சம்பவம் எனவும் இரு வேறு கோணத்தில் சமூக ஊடகங்களில் நேற்றைய தினம் பரவலாகப் பேசப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் சிறிதரன் எம்.பியின் மூத்த மகன் தனது முகநூல் பக்கத்தில் நடந்தது தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

நடந்தது என்ன?

ஓரிரு தினங்களுக்கு முன்னர் சிறிதரனின் இளைய மகனின் நண்பர்களுக்கும் பிறிதொரு இளைஞர் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இவ்வாறு மோதலாக மாறியுள்ளது. இது 2000/2021 ஆண்டு உயர் தர மாணவர்களக்கிடையிலான மோதல்.

இந் நிலையில் நேற்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் சிறிதரன் எம்.பியின் இளைய மகனும் நண்பர்களும் கே.கே.எஸ். வீதியில் உள்ள உணவகத்தில் நின்றிருந்தபோது, ஏற்கனவே முரண்பட்ட குழு அங்கு வந்து இவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளது.

இதனால் சிறிதரன் எம்.பியின் இளைய மகன் தனது சகோதரனுக்குத் தொலைபேசியில் விடயத்தைத் தெரிவிக்க, அவர் உடனே மோட்டார் சைக்கிளில் சென்று தனது தம்பியை அழைத்து வந்துள்ளார்.

இருந்தும் அங்கு நின்ற சிறிதரன் எம்.பியின் இளைய மகனின் இரு நண்பர்கள் மீதும் குறித்த குழு தாக்குதல் நடத்த முற்பட அவர்களும் இவருக்குத் தொலைபேசியின் விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் அவ்விடத்துக்குச் சென்று சிறிதரனின் மூத்த மகன், அவர்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்துப் பின்தொடர்ந்து வந்த அக் குழுவே இத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளது.

இத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு குழுவோ, இனந்தெரியாதவர்களே இல்லை. சிறிதரனின் மகனின் நண்பர்கள் ஏற்கனவே தாக்குதலாளிகளை அறிந்திருந்தனர்.

எனவே இச் சம்பவம் தொடர்புடையவர்கள் அனைவரும் இனங்காணப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post