பி.சி.ஆர். பரிசோதனைக்காக யாழில் அதிகளவில் திரண்ட மக்கள்! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ். மாநகரின் முடக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், முகாமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வகுப்பு தொழிலாளர்கள் அனைவருக்குமான பி.சி.ஆர். பரிசோதனை இன்று காலை ஆரம்பிப்பட்டு நடைபெற்று வருகிறது.

யாழ். நகர் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மூன்று இடங்களில் யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் பரிசோதனை மேற்கொள்ள ஒன்றுகூடியுள்ளனர்.

யாழ். மாநகர சந்தைப் பகுயில் உள்ள வியாபாரிகள் இதுவரை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பின் அவர்களும் இந்தப் பரிசோதனையில் தவறாது கலந்துகொண்டு தங்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post