சுவிஸ்- லவுசான் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றி!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சுவிஸ் நாட்டில் லவுசான் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.

சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தில் 07.03.2021 இடம்பெற்ற தேர்தலில் இரு வேறு கட்சிகளில் போட்டியிட்ட தமிழர்கள் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.
 
தம்பிப்பிள்ளை நமசிவாயம் 8176 வாக்குகளை பெற்று மாநில தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக நான்காவது தடவை லவுசான் மாநிலத்தில் வெற்றிபெற்ற தமிழர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதேவேளை இத் தேர்தலில் முதல் தடவையாக போட்டியிட்ட கந்தையா போல்ராஜ் 6141 வாக்குக்களை பெற்று வெற்றிபெற்று லவுசான் மாநிலத்தில் வெற்றிபெற்ற முதல் தமிழ் இளையவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Previous Post Next Post