இயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நின்ற கார் தொடர்பில் வெளியான தகவல்!

கிளிநொச்சி - இயக்கச்சி காட்டுப் பகுதியில் அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட கார் கொழும்பிலிருந்து கடத்தி வரப்பட்டதென பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வாடகைக்கு குறித்த கார் இரவு வரவழைக்கப்பட்டுள்ளதுடன் இதன்போது ஓட்டுநரை தாக்கிவிட்டு குறித்த காரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பின்னர் குறித்த காரை பளை இயக்கச்சி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து பளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து குறித்த காரில் பயணித்த சந்தேக நபர்கள் ரன்தெனிய பகுதியில் வைத்து குறித்த காரை கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பை சேர்ந்த வியாபாரி ஒருவருடைய காரே இவ்வாறு கடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 25 வயதுடைய இளைஞர்கள் இருவரினால் குறித்த காரை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் குறித்த நபர்களை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post