நயினை நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு உட்பட இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருக்களும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் இன்று அதிகாலை உயிரிழந்திருந்தார்.

அவரின் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியில் கொரோனாத் தொற்றுக் காரணமாக 68 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடைய மகள் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நிலையில் அவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Previous Post Next Post