தமிழகத்தில் மனைவியை அடித்துக் கொன்ற இலங்கை அகதி! கொன்றது ஏன்? அகதி வாக்குமூலம்!!


தமிழகத்தில் கோவை காந்தி மாநகர் அருகே மனைவியை கிரிக்கெட் மட்டையால், கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின், யாழ்ப்பாணத்திலிருந்து அகதியாக சென்ற நபரே இந்த கொலையை புரிந்தார்.

இச் சம்பவத்துடன் தொடர்பில் தேடப்பட்டு வந்த இலங்கை தமிழ் அகதியான லவேந்திரன் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் - கோவை காந்திமாநகர் 2வது வீதியை சேர்ந்த இலங்கை அகதியான லவேந்திரன் தனது மனைவியான கவிதாவை (32 வயது) கொலை செய்த நிலையில், தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கவிதாவை திருமணம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் எங்களது குடும்ப வாழ்க்கை எவ்வித பிரச்சினையும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாக சென்றது.

குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இல்லாததால், கவிதாவை அருகில் உள்ள ஸ்பின்னிங் மில்லிற்கு வேலைக்கு அனுப்பினேன். மிகவும் மகிழ்ச்சியாக சென்ற எங்கள் திருமண வாழ்க்கை, என் மனவைியின் கையில் செல்போன் வந்த பின்னர் திசை மாறியது.

எனது மனைவி வீட்டில் இருக்கும் நேரத்தில் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பார். அவள் யாரிடம் பேசுகிறாள் என்பது குறித்து கேட்டால் சரியாக, பதில் சொல்ல மாட்டாள். இதனால் எனக்கு சந்தேகம் வரும்.

இப்படி எந்த நேரமும் செல்போனில் மூழ்கி கிடந்ததால் நான் அவளை கண்டித்தேன். குழந்தைகள் மீது கவனத்தை செலுத்தும்படி கூறினேன் ஒரு வாரத்திற்கு முன் செல்போனில் பேசுவது குறித்து கவிதாவை கண்டித்தேன்.

இதனால் அவள், என்னிடம் கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வென்று விட்டாள். எங்கே சென்றாள் என்று எனக்கு தெரியவில்லை. அவளின் இந்த செயல் மேலும் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஒருவாரம் கழித்து வீடு திரும்பிய கவிதாவிடம், எங்கு சென்றாய், நமக்கு குழந்தைகள் இருப்பது தெரியவில்லையா. நீ இல்லாமல் குழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டனர் என்று கூறினேன்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கிரிக்கெட் மட்டையால் அவளை அடித்தேன். எதிர்பாரதவிதமாக அவள் இறந்து விட்டாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த எங்கள் குடும்ப வாழ்க்கை மனைவியின் செல்போன் மோகத்தால் சிதைந்து விட்டது.

நானும் சிறைக்கு சென்று விட்டால் எனது குழந்தைகள் தாய், தந்தை இன்றி தவிப்பார்கள். இதனை என்னால் தாங்க முடியவில்லை.” என கூறியுள்ளார்.
Previous Post Next Post