நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர், அடியவர்களிடம் கோரியுள்ளனர்.

அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மட்டுமே நித்திய வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

அடியவர்களின் நேர்த்திகள் , அபிசேகங்கள் என்பன தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை மீள ஆரம்பிக்கும் போது அடியவர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும்.

அதனால் தற்போதைய நிலமைகளை கருத்தில் கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து உங்கள் வீடுகளில் இருந்தவாறு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள்- என்றுள்ளது.
Previous Post Next Post