யாழ்.அரியாலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு! மூவர் தப்பியோட்டம்!! (படங்கள்)

அரியாலை பூம்புகாரில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை பொலிஸார் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அதனால் உழவு இயந்திரம் தடம்புரண்ட நிலையில் அதில் பயணித்த மூவரும் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தப்பி ஓடியவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மணல் கடத்தல்காரர்களினால் கைவிடப்பட்ட மணல் ஏற்றிய பெட்டியுடன் உழவு இயந்திரம் மற்றும் பக்க இயந்திரம் எனபன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post