13 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 12 வயது தம்பி!


வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் 12 வயது தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி வயிற்று குத்து காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வைத்தியர்கள் வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளில் தனது தம்பி தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் 12 வயது சிறுவன் ஓமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post