யாழ்.கொக்குவில் பகுதியில் அதிகாலை பெருமளவு இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு!


யாழ். கொக்குவில் பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இன்று அதிகாலை இராணுவம் மற்றும் பொலிசாரால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிசாரால் கொக்குவிலில் ஒரு பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.

இதன் போது சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று அதிகாலை திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு வேளைகளில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் பல வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post