கிளிநொச்சியிலிருந்து கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து!


கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து இன்று அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் பேருந்தொன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நேற்றிரவு கதிர்காமத்தை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதன்போது இன்று அதிகாலை பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்த 17 பேரும் படுகாயமடைந்த நிலையில் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post