டிக் டாக்கில் பிரபல்யமான 16 வயதுச் சிறுமி தற்கொலை!

டில்லியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் ஸ்டாரான 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியைச் சேர்ந்த சியா கக்கர் டிக்டாக்கில் பிரபலமானவர். டிக்டாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சுமார் ஒரு லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு ஷாஹ்தாராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.


டி.சி.பி அமித் சர்மா கூறுகையில், ‘தற்கொலைக் குறிப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார்.

சிறுமி புதன்கிழமை மாலை ஒரு பஞ்சாபி பாடலுக்கு நடனமாடிய ஒரு விடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இவரது மறைவுக்கு டிக்டாக், இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Previous Post Next Post