யாழ்ப்பாணக் கடைகளைச் சேர்ந்த 54 பேருக்குக் கொரோனாத் தொற்று!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத்தொகுதி வர்த்தகர்கள், பணியாளர்களில் மேலும் 54 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 464 பேரின் மாதிரிகள் முள்ளேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கட்டன.

அவற்றில் 54 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று காலை அறிக்கை கிடைத்துள்ளது.

இதேவேளை, நேற்று மாதிரிகள் பெறப்பட்டோரின் முடிவுகள் இன்று மாலையே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post