7 மணிநேரத்துக்கு மேல் நாளை மின்வெட்டு!


நாளையும் நாட்டின் பல பகுதிகளில் ஏழு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இதன்படி, ஏ முதல் எல் வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணித்தியாலங்கள் மின்வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணித்தியாலம் 30 நிமிடங்கள் வரை மின்வெட்டும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் மின்சார சபை கோரியுள்ளது.

அத்துடன், பி தொடக்கம் டபிள்யூ வரையான வலயங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஐந்து மணித்தியாலங்கள் மின்தடை என்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மின்சாரம் தடை ஏற்படும் எனவும் கோரப்பட்டுள்ளது.
Previous Post Next Post