நாடு முழுவதும் ஊரடங்கு!

உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியினுள், மக்கள் ஒன்று கூடல்களை மேற்கொண்டு, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

காலி முகத்திடல் உட்பட நாட்டின் பல பாகங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவானதையடுத்து இவ்வாறு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post