நடிகர் விஜயின் தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

நடிகர் விஜயின் நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு ரசிகர்கள் எவரும் பனர் வைக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மோட்டார் சைக்கிளில் பல்லாவரம் அருகில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவே இருந்த அரசியல் கட்சி ஒன்றின் பனர் காற்றில் சரிந்து அவர் மீது விழுந்துள்ளது.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் பவுசர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர் இனி யாரும் தங்களுக்குப் பனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

இந் நிலையில்தான் நடிகர் விஜயும் இவ் அறிவித்தலை விடுத்தள்ளார்.

இதேவேளை முன்னணி நடிகர்களான சூர்யா, சிலம்பரசன் ஆகியோரும் மேற்படி அறிவிப்பை ஏற்கனவே விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post