கனடாவில் கோர விபத்து! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!

கனடாவில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி ரிச்மண்ட் ஹில் பகுதியில் மாலை வேளையில் இரண்டு வாகனங்கள் மோண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் ரொரன்ரோவை வாழ்விடமாகவும் கொண்ட 65 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய நிலையில், வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளனான இரு வாகனங்களின் சாரதிகளும் காயமின்றி தப்பியதுடன், அவர்கள் விசாரணைகளுக்காக பொலிஸாருடன் ஒத்துழைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சாரதிகள் மதுபோதையில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Previous Post Next Post