
பிரான்ஸில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி யாழ்ப்பாண தாய் - மகள் கொ*டூரமான கொ*லை செய்யப்பட்ட சம்பவம் புலம்பெயர் தமிழரிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
2018 ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து பிரான்சுக்கு அகதியாக வந்த நிரோஷன், பிரான்ஸில் தனது உறவினர்களான விஜயஸ்ரீ என்கின்ற பெண்மணியின் வீட்டில் தங்கியிருந்தார்.
விஜயஸ்ரீக்கு 51 வயது, அவரது மகள் திலக்ஷனாக்கு 21 வயது.விஜயஸ்ரீயின் வீட்டில் தங்கி இருந்து தனது வதிவிட விசாவுக்கான வேலைகளை நிரோஷன் செய்து வந்தாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இரவு விஜயஸ்ரீயின் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார், வீட்டுக்கு வந்தவர் வீட்டில் மனைவி வைதேஸ்ரீ மற்றும் மகள் திலக்ஷனாவும் மிகக் கொ*டூரமாக கொ*லை செய்யப்பட்டிருந்தமையை கண்டு அதிர்ந்தார்.
உடனடியாக போலிசார் வரவழைக்கப்பட்டார்கள் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தடையங்கள் எல்லாம் மிகக் கச்சிதமாக அழிக்கப்பட்டு இருப்பதை கண்டார்கள். எந்த ஒரு தடயங்கள் கைரேகைகள் மற்றும் கொ*லை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்*திகள் போன்று எதையுமே அங்கு காணக் கிடைக்கவில்லை.
மனைவிக்கு 30க்கும் மேற்பட்ட கத்தி குத்துக்களும் மகளுக்கு 13 க்கும் மேற்பட்ட கத்தி குத்துக்களுடன் கொ*டூரமாக குத்*தி கொ*லை செய்யப்பட்டு கிடந்தார்கள்.
தடயங்கள் இல்லாததால் திக்குமுக்காடிய போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியதை அடுத்து விஜயஸ்ரீ மற்றும் திலக்ஷனா ஆகியோரின் உடலில் ஏதும் டிஎன்ஏக்கள் இருக்கின்றதா என்பதை பரிசோதித்தனர்.
அப்போது மகள் திலக்ஷனாவின் கை விரல் நகத்தில் நிரோசனின் டி என் ஏ இருந்ததை கண்டுபிடித்தார்கள் இதைத் தவிர வேறு ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
நிரோசனை கைது செய்து மேல் அதிக விவரங்களை தேடிய போது நிரோஷன் இதற்கு முன்னரும் இரண்டு பா*லியல் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி என்பது தெரிய வந்தது. அது மட்டுமன்றி பரிஸ் புறநகரில் வழிப்பறி கொள்ளைகளிலும் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களுடனும் இவர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் தாயையும் மகளையும் கொ*டூரமாக கொ*ன்ற நிரோஷனை வரும் ஏப்ரல் மாதம் போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்த உள்ளதாக பிரான்ஸ் தகவகள் தெரிவிக்கின்றன .
அதேவேளை இந்த கொலையை நிரோஷன் மறுத்து வருகின்ற நிலையில், உறவினர் என அடைக்கல கொடுத்த குடும்பம் , சிதைந்த சம்பவம் பெரும் துயரமானது.