சூரியன் எவ்.எம் அறிவிப்பாளருக்கு வாழ்த்துத் தெரிவித்த இசையமைப்பாளர் தேவா!

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் வானொலியின்  அறிவிப்பாளர் மனோபிரியா வாமதேவனிற்கு இந்திய பிரபல இசையமைப்பாளர் தேனிசைத்தென்றல் தேவா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது,

 கடந்த சனிக்கிழமையன்று தேனிசை தென்றல் தேவாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மேற்படி அறிவிப்பாளர் மனோபிரியா வாமதேவன்  சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சூரியன் எவ்.எம் வானொலியில் ஊடாகத்  தொகுத்து வழங்கியிருந்தார்.  அந்நிகழ்ச்சியை தேவா நேரடியாக தனது இல்லத்திலிருந்தவாறு கேட்டுள்ளார்.

அதன் பின்னணியிலேயே இசையமைப்பாளர் தேவா தனது பாராட்டுகளை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அதன்போது திரையிசையில் அறிமுகப்படுத்தும் தனது எண்ணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

மேற்படி அறிவிப்பாளர் சூரியன் எவ்.எம் வானொலியில் நீண்டகாலமாக பிரதான செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post