யாழில் விசித்திரமான கண்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி! (படங்கள்)

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.

நவக்கிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசாமி பாலகரன் என்ற விவசாயியின் ஆடே இவ்வாறு ஒரு குட்டியைப் பிரசவித்துள்ளது.

அந்தக் குட்டியின் நெற்றிக்கு மேல், இரண்டு கண்களும் ஒன்றான நிலையில் காணப்படுகின்றன.

டிசம்பர் 29 ம் திகதி பிறந்த இந்த அதிசய ஆட்டுக்குட்டியை அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
Previous Post Next Post