
இந்த சம்பவம் பிரான்ஸ் பரிஸ் Le Bourget ரயில் நிலையத்தில் இடம்பெற்றதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த மகேஸ்வரன் லக்சன் (வயது- 24) இளைஞனே உயிரிழந்துள்ளார். பிரான்ஸில் வதிவிட உரிமை மறுக்கப்பட்டதால், இளைஞன் மனஉளைசலுக்குள்ளாகி இந்த விபரீத முடிவை எடுத்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை லக்சன் தற்*கொ*லை செய்து கொண்டமை தொடர்பாக அவரது நண்பர்கள் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனுக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை எனவும் அதன் காரணமாக மிகக் குறைந்த சம்பளத்தில் பிரான்ஸ் பாரிஸ் Le Bourget பகுதியில் உள்ள இந்திய உணவகமான சின்னவீடு என்ற ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால் அவருக்கு அந்த ஹோட்டலின் முதலாளியான அரவிந் என்பவர் 3 மாத காலமாக சம்பளம் கொடுக்காமல் 2 நேர சாப்பாடு மட்டுமே கொடுத்து கடுமையாக வருத்தி வந்துள்ளதாகவும் இதனால் மனமுடைந்த நிலையில் குறித்த இளைஞன் ரயில் நிலையத்தில் தற்*கொ*லை செய்துள்ளதாக நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.