பிரான்ஸில் கர்*ப்பிணி மனைவியைச் சித்*திரவதை செய்த கிளிநொச்சி நபருக்கு 6 வருட கால சிறை!

2015ம் ஆண்டிலிருந்து பிரான்சில் வசித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதான நரேஷ் என்வருக்கு பிரான்ஸ் Tribunal correctionnel நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது. அத்துடன் மனைவிக்கு நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்*ப்பிணி மனைவியான 28 வயதான விகிர்தாவை கட்டி வைத்து சித்*திரவதை செய்தமைக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு பிரான்சிலிருந்து இந்தியா சென்று இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த உறவுக்கார யுவதியான விகிர்தாவை நரேஷ் பதிவுத்திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டே விகிர்தாவை நரேஷ் பிரான்சிற்கு அழைத்துள்ளார். 

விசா சிக்கல்கள் காரணமாக 3 ஆண்டுகள் விகிர்தா இலங்கையில் தங்கும் நிலையில் இருந்துள்ளார். 2024ம் ஆண்டு மார்ச் மாதமளவில் பிரான்ஸ் சென்ற விகிர்தா அதன் பின் கர்ப்*பமாகியுள்ளார். மே மாதம் நடாத்தப்பட்ட கர்ப்ப பரிசோதனையில் விகிர்தா 5 மாத கர்*ப்பினி என வைத்தியர்கள் கூறியதால் நரேஷ் கடும் சந்தேகம் அடைந்ததாக தெரியவருகின்றது. 

அதன் பின்னர் நரேஷ் தனது மனைவியை தொடர்ச்சியாக சித்*திரவதை செய்து வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே நரேஷ் 2024ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி இரவு 8 மணியளலில் மது போதையில் வந்து தனது மனைவியை தாக்*கியதுடன் மனைவி கத்திய போது மனைவியின் வாய்க்குள் தனது பெனியனை அடைந்த பின் மனைவியின் கை, கால்களை கட்டிவிட்டு நிர்*வாணமாக்கி சித்*திரவதை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில்ஏற்கனவே மனைவியின் கதறல் சத்தம் கேட்ட அயலவர் பெலிசாருக்கு தெரியப்படுத்தியதால் அங்கு வந்த பொலிசார் மனைவி நிர்*வாண நிலையில் காணப்படுவதையும் நரேஷ் மது போதையில் இருப்பதையும் கண்டுள்ளார்கள். அதன் பின்னர் மனைவியை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் நரேஷ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தான். தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளின் போது தனது ஒரு வயதுக் குழந்தையுடன் விகிர்தா நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார். விகிர்தா கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நான் 2024ம ஆண்டு மார்ச் மாதம் பிரான்சிற்கு வந்தேன். அவரால் கர்*ப்பமானேன். மருத்துவப் பரிசோதனையின் போது நான் 5 வாரத்துக்கு உட்பட்ட கர்*ப்பிணி என வைத்தியர் பிரெஞ் மொழியில் கூறினார். எனக்கு அப்போது பிரெஞ் மொழி பரீட்சார்த்தமில்லை. கணவருக்கும் பெரிதாக பிரெஞ் மொழி தெரியாது. 

அவர் நான் 5 மாத கர்*ப்பிணி என தவறாக விளங்கியுள்ளார். என்னை காரில் அழைத்து வந்து அன்றே என்னைத் தாக்*கினார். நான் பல தடவைகள் அவருக்கு சத்தியம் செய்தும் அவர் நம்பவில்லை. மீண்டும் என்னை இலங்கைக்கு போ என வற்புறுத்தி வந்தார். அத்துடன் உன்னை கர்ப்*பமாக்கியவனுடன் சென்று வாழ் என கூறி வந்தார். 

எனக்கு பிரான்சில் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் நான் மௌனமாக இருந்தேன். பிள்ளை பிறந்தவுடன் மரபணு சோதனை செய்யலாம் என கூறியும் அவர் கேட்கவில்லை. அத்துடன் மது போதைக்கும் அடிமையானர். எனக்கு உணவு பொருட்கள் கூட வாங்கித்தர மறுத்தார். இவ்வாறான நிலையிலேயே ஒரு நாள் இரவு என்னை கட்டி வைத்து எனது மா*ர்பு, பெண் உறு*ப்பு, குதப் பகுதி ஆகியவற்றை சிகரட் லைட்டரால் எரி*த்தார்” என விகிர்தா வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது அரச பராமரிப்பில் குழந்தையுடன் வாழ்நது வரும் வரும் விகிர்தா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அத்தடன் மரபணுப் பரிசோதனையில் குழந்தை நரேஷ் உடையது என நிரூபனமாகியது. நரேஷ் தனது சட்டத்தரணி மூலம் தனது குழந்தை இல்லை என்பதற்காக மரபணுப்பரிசோதனை செய்யுமாறு கூறியதாக தெரியவருகின்றது.

இந் நிலையிலேயே நரேஷ் ற்கு Tribunal correctionnel நீதிமன்றம் 6 வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. உறுப்*புகளில் ஏற்பட்ட தீக் காய*ங்கள் உயிருக்கு ஆப*த்து ஏற்படுத்துவதாக அமையவில்லை என்ற காரணத்தால் நரேஷ் ற்கு 6 வருட சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது எனவும் உயி*ராபத்த விளைவிக்க கூடிய தீக் காய*ங்கள் ஏற்பட்டிருந்தால் நரேஷ்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் என நீதிபதி கூறியுள்ளார்.

பிரான்சிற்கு சென்று பிரெஞ் மொழியை சரியாக கற்றுக் கொள்ளாத காரணத்தால் இந் நிலை ஏற்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என நரேஷ் நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Previous Post Next Post