யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் புறச்சூழல் நேற்று முன்தினம் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகியதையடுத்தே குறித்த பாடசாலையின் புறச்சூழல் தூய்மையாக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்பாடு நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் அவர்களின் தலைமையில் நல்லூர் பிரதேச சபையின் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டன.
பாடசாலை ஆரம்பமாகும் போது மாணவர்களின் சுகாதாரம், புத்துணர்ச்சி என்பவற்றைக் கருத்தில் கொண்டு இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






