சாதாரணமாகப் பாரிஸ் நகரில் ஒரு நாளுக்குப் பத்துக்கும் குறைவான மர*ணங்களே அவசர முதலுதவி படையினரால் கையாளுப்படும். ஆனால், நேற்றைய இற*ப்பு எண்ணிக்கை வழக்கத்தை விடப் பலமடங்கு அதிகரித்துள்ளது,
இந்தத் சம்பவம் கோடையின் கொ*டிய தாக்கத்தை அப்பட்டமாகக் கண்முன் நிறுத்துகிறது. பதிவான இந்த மர*ணங்களில், 25 பேரின் உயி*ர்கள் திடீர் இதயச் செயலிழப்பால் து*டிது*டித்துப் பிரிந்துள்ளன. எஞ்சியோர் பிற பாதிப்புகளால் மர*ணத்தைத் தழுவியுள்ளனர்.
இந்த அனைத்து மர*ணங்களுக்கும் நேரடியாக வெப்பம் மட்டுமே காரணமில்லை என்றாலும், உடல் நலிந்தவர்களை மர*ணத்தின் விளிம்பிற்குத் தள்ளுவதில் இந்த மூச்*சுமுட்டும் அனல் காற்று முக்கியப் பங்கு வகித்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவியலாது.
இயற்கையின் இந்த இரக்கமற்ற சீற்றத்திலிருந்து நம்மையும் நமது சுற்றத்தையும் தற்காத்துக்கொள்ள, மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது இந்த நெருக்கடியான தருணத்தில் மிகவும் இன்றியமையாததாகும்.