யாழில் கத்*திக் குத்*துத் தாக்*குதல்! 39 வயது நபர் உயி*ரிழப்பு!!

யாழில் கத்*தி குத்*து தாக்*குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயி*ரிழந்துள்ளார்.

ரகு துஷ்யந்தன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயி*ரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22.06.2026 அன்று ஒரு கத்*தி வெ*ட்டு தாக்*குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வயிற்றில் படு*காயமடைந்த நபர் சிகி*ச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (27-06-2026) உயி*ரிழந்துள்ளார்.

குறித்த தாக்*குதலை மேற்கொண்ட நபரை முன்னதாக வட்டுக்கோட்டைக் பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவரை எதிர்வரும் 07.07.2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post