கதிரவனின் கோ*ரப் பிடியிலிருந்து விடுபடுகிறது பிரான்ஸ்!

கடந்த சில நாட்களாகச் சுட்டெரித்த கதிரவனின் கோ*ரப் பிடியிலிருந்து விடுபட்டு, இந்த ஞாயிறு விடியலில் பிரான்ஸ் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. பல மாவட்டங்களில் கொ*திக்கும் வெப்பம் சடுதியாகக் வீழ்ச்சியடைந்து, வறண்ட நிலத்திற்கு இதமான விடுதலையை அளித்துள்ளது.

கதிர்வெம்மையலையின் இந்த வீழ்ச்சி அமைதியாக அரங்கேறவில்லை. கொ*தித்தெழுந்த இயற்கையின் கோபம், நேற்றிரவு (சனிக்கிழமை) பேரி*டியாக இறங்கியது. பல பிராந்தியங்களில் இருண்டு வந்த கார்மேகங்கள் ஆவேசமாகக் கொட்டித் தீர்த்தன.

வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்த பேய்க்காற்று, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான ஆலங்கட்டி மழை, கண் கூசும் பேரொளியுடன் கூடிய இடி மின்னல் என நேற்றைய இரவு ஒரு பெரும் புயலின் சாட்சியாக அமைந்தது.

நேற்றிரவு பெய்த இந்தப் பெருமழையினாலும், குளிர்ந்த காற்றினாலும் எச்*சரிக்கை நிலைகளில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது:
நேற்றைய தினம் பல மாவட்டங்கள் தகிக்கும் அனலில் தவித்த நிலையில், இன்று வெறும் இரண்டு மாவட்டங்கள் மட்டுமே கதிர்வெம்மையலைக்கான உச்சக்கட்டச் 'சிவப்பு எச்*சரிக்கையில்' எஞ்சியுள்ளன.

இடி மின்னல் புயல் மற்றும் எஞ்சியுள்ள வெப்பத்தின் காரணமாக 45 மாவட்டங்கள் 'ஆரஞ்சு நிற' எச்*சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
இன்று மாலைக்குள் இந்த உச்சக்கட்டச் சிவப்பு எச்*சரிக்கைகள் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு, இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களாகக் கொதித்துக் கிடந்த நிலம், மழையில் குளிர்ந்து இதமான தென்றலைச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளது!
Previous Post Next Post