
சமூக வலைத்தளமான TikTok-இல் "கொக்கி குமார்" என்ற பெயரில் அறியப்பட்ட அழகேந்திரராஜா சஜித் (28) என்பவரே உயி*ரிழந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அவர் மாரடைப்பால் உயி*ரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. எனினும், விசாரணைகளின் போது அவர் அருந்தியதாகக் கூறப்படும் குளிர்பானத்தில் போ*தைப்பொருள் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்த உண்மை நிலை, பிரே*தப் பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின்னரே உறுதிப்படுத்தப்படும் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய பிரான்ஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.