யாழில் கடத்தப்பட்ட பெண்? பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில், முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் இதயகுமாரன் அவர்களால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

முறைப்பாடு பதிவு செய்த இதயகுமாரன் அவர்கள் குறித்த பகுதியால் சென்று கொண்டிருந்தபோது அந்த முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்திச் சென்றதை தான் கண்டதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து சங்கானை - நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதியை முச்சக்கர வண்டியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணையை மேற்கொண்டபோது அவ்வாறு தான் யாரையும் கடத்தவில்லை என கூறியுள்ளார். அத்துடன் எந்த பெண்ணையும் காணவில்லை என இதுவரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Previous Post Next Post