
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவி நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த 50,000 ரூபாய் பணம் மற்றும் வளைகாப்பு ஒன்றும் களவாடப்பட்டிருந்தது.
குறித்த பேருந்து பரந்தன் சந்தியினை அண்மித்த போது சந்தேகத்திற்கிடமாக நின்ற பெண்கள் மூவரை நடத்துனர் விசாரித்த போது அவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளதுடன், பொதுமக்களினால் குறித்த மூன்று பெண்களும் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் பரந்தன் சந்தியில் நின்ற பொலிஸாரிடம்,குறித்த மூன்று பெண்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

