திருமணம் உள்பட அனைத்து ஒன்றுகூடல்களுக்கும் தடை!


திருமணங்கள் உள்பட அனைத்து ஒன்றுகூடல்கள், விழாக்களுக்கும் அடுத்த திங்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்படும்.

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி இந்த முடிவை எடுத்தது.

நாட்டில் கோரோனா கட்டுப்படுத்தும் திட்டம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
Previous Post Next Post