கட்சியின் பெயர் மற்றும் சின்னம் என்பன ஒரு மாட்டின் மீது குறிசுடப்பட்டு வாக்குச் சாவடியின் முன்பாக கட்டப்பட்டிருந்தது அங்கு வாக்களிக்க வந்த மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இச் சம்பவம் மட்டக்களப்பு ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
எனவே இது தொடர்பில் உரிய தரப்பினர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.